22 ஆண்டுகள் நீடித்த மர்மம் நீங்கியது.. பிரஞ்சு பெண் கொலை வழக்கில் பிரித்தானியருக்கு 25 ஆண்டு சிறை

Report Print Basu in பிரான்ஸ்

ஐயர்லாந்தில் பிரான்ஸ் திரைப்பட தயாரிப்பாளரை கொலை செய்த குற்றத்திற்காக பிரித்தானியருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஐயர்லாந்திற்கு சுற்றுலா சென்ற பிரஞ்சு திரைப்பட தயாரிப்பாளர், Sophie Toscan du Plantier மர்மமான முறையில், இரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக ஐயர்லாந்தில் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில், ஐயன் பெய்லி என்ற நபர் இரண்டு முறை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின் எந்தவித வழக்கும் பதியப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இக்கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு பெய்லி நேரில் ஆஜராக வேண்டும் என பிரான்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இக்கொலை குற்றத்தை மறுத்து வந்த ஐயர்லாந்தை சேர்ந்த பெய்லி, சட்டப்படி பிரான்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பிரஞ்சு பெண் திரைப்பட தயாரிப்பாளர் Sophie Toscan du Plantier கொலை வழக்கில் 62 வயதான ஐயன் பெய்லியே குற்றவாளி என கண்டறிந்த பிரான்ஸ், absentia நீதிமன்றம் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவரை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

பிரான்ஸ் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முழுமையான சீற்றத்தின் வெளிபாடு மற்றும் தவறான நீதி என பெய்லியின் வழக்கறிஞர் விமர்சித்துள்ளார்.

அதேசமயம், 22 ஆண்டுகளுக்கு பிறகு நீதிக்கு வெற்றிக்கிடைத்துள்ளது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி. இப்போது ஐயர்லாந்து பெய்லிவை நாடு கடத்த வேண்டும் என Sophie Toscan du Plantier மகன் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers