பாரீஸில் காபரே நடனம் ஆட இருக்கும் பிரித்தானிய இளம்பெண்: ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் காபரே நடனம் என்பது மிகவும் பிரபலம் என்பதை பலரும் அறிந்திருக்கும் நிலையில், பிரித்தானிய இளம்பெண் ஒருவர் அந்த நடனத்தில் பங்கேற்க இருக்கிறார்.

Latviaவில் பிறந்து பிரித்தானியாவில் வளர்ந்த Viktoria Modesta (31), பெரும்பாலும் அமெரிக்காவில் வசிக்கிறார்.

Viktoriaவைப் பொருத்தவரை குறிப்பிடத்தக்க ஒரு விடயம், அவருக்கு ஒரு கால் இல்லை. பிறக்கும்போது ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணத்தால் அவரது ஒரு காலை முட்டிக்கு கீழ் அகற்ற வேண்டிய முடிவை அவர் எடுத்தார்.

அவரது குறைபாட்டின் காரணமாக, அவர் பிறந்தபோது ஐந்து நாட்களுக்கு அவரது தாய் Viktoriaவை திரும்பிக் கூட பார்க்கவில்லையாம்.

அத்துடன் அவருக்கு 17 வயதானபோது அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்து விட்டிருக்கிறார் அவரது தாய்.

வளர்ந்து வரும்போது தனக்கு தன்னம்பிக்கை இருந்தாலும், அவரை சுற்றியிருந்தவர்கள் கேள்விகளால் அவரது தன்னம்பிக்கையை குலைத்ததாகதெரிவிக்கிறார் Viktoria.

காலில்லாமல் நீ எப்படி வாழ்ப்போகிறாய், உன்னை யார் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்றெல்லாம் தன்னை வயதில் மூத்த பெண்கள் கேட்டதாகதெரிவிகிறார் அவர்.

தற்போது பாரீஸின் பிரபல காபரே நிறுவனம் ஒன்றில் நடனம் ஆட இருக்கும் Viktoria, அது அவருக்கு அதிக தன்னம்பிக்கையை அளித்துள்ளதோடு அவரை ஒரு முழு பெண்ணாக உணரவும் செய்துள்ளதாக தெரிவிக்கிறார்.

அவரது ஒரு வீடியோ ஏற்கனவே பிரபலமாகி, யூடியூபில் 12 மில்லியன் பாரவையாளர்களால் ரசிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்