சொந்த செலவில் இளம் பெண்ணை வரவழைத்து நெய்மர் செய்த அதிர்ச்சி செயல்... பிரான்ஸ் ஹோட்டலில் நடந்த சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரேசில் கால் பந்து அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உலகமெங்கிலும் கால்பந்துக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக ரெனால்டோன், மெஸ்ஸி, நெய்மர் போன்றோரை ஏராளமான ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பின் தொடர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரேசில் அணி வீரரான நெய்மர் கடந்த மாதம் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக பாரிஸ் சென்ற போது, இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு பழக்கமான பெண் ஒருவரை தன்னுடைய சொந்த செலவில் பிரான்ஸ் தலைநகர் பாரிசிற்கு வரவழைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த 15-ஆம் திகதி அந்த பெண் அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அப்போது குடி போதையில் இருந்த நெய்மர், ஹோட்டலில் தங்கியிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் இது குறித்து அந்த பெண் புகார் கொடுத்ததால், பாரிஸ் பொலிசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers