ஈராக் மீண்டும் அதிரடி... ஒன்பதாவது பிரெஞ்சு நாட்டவருக்கு மரண தண்டனை

Report Print Basu in பிரான்ஸ்

ஈராக்கில் மேலும் இரண்டு பிரான்ஸ் ஜிகாதிகளுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 32 வயதான Aouidate உட்பட மேலும் ஒரு நபர், இன்று ஈராக் நீதிமன்றத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

முன்னதாக, மே 27ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜரான Aouidate, குற்றத்தை ஒப்புக்கொள்ள தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி முகத்தில் காயங்களை காட்டினார். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.

மருத்துவ பரிசோதனை அறிக்கையில் Aouidate துன்புறுத்தப்பட்டதற்கான தடயம் ஏதும் இல்லை என குறிப்பிடப்பட்டு நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையை குறிப்பிட்ட நீதிபதி, Aouidate குற்றச்சாட்டை நிராகரித்து அவருக்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கண்டறியப்பட்ட நிலையில், இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த வாரம், ஏற்கனவே 7 பிரான்ஸ் நாட்டவருக்கு இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது, இரண்டு பேர் என மொத்தம் 9 பிரான்ஸ் நாட்டவருக்கு ஈராக் மரண தண்டனை விதித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers