பாரிஸ் ஹொட்டலில் நடந்தது என்ன? உண்மையை அம்பலப்படுத்திய கால்பந்து நட்சத்திரம் நெய்மார்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

உலக கால்பந்து ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமான நெய்மார், தம்மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டை மறுத்துள்ளதுடன், இது பணம் பறிக்கும் முயற்சி எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரேசில் கால்பந்து நட்சத்திரமான 27 வயது நெய்மார், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான குறித்த பெண்ணை சொந்த செலவில் பாரிஸ் நகரின் பிரபலமான ஹொட்டலில் தங்க வைத்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கை வெளியிட்ட பொலிசார், பிரான்ஸ் கால்பந்து அணி ஒன்றிற்காக சுமார் 198 மில்லியன் பவுண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நெய்மார், மே மாதம் 15 ஆம் திகதி தொடர்புடைய ஹொட்டலுக்கு சென்றதாகவும்,

மது போதையில் இருந்த நெய்மார், தற்போது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும், பின்னர் திடீரென்று அவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் உலக கால்பந்து ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நெய்மார் தற்போது விளக்கமளித்துள்ளார்.

அதில், தன்னிடமிருந்து பணம் பறிக்கும் உத்தியில் வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டி விட்டு தன் மீது பொய் குற்றம் சுமத்துவதாகவும்,

இந்த விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நெய்மாரின் வழக்கறிஞர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக பாதிக்கப்பட்ட பெண் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரில், நெய்மாரின் அறிவுறுத்தலின்படியே பாரிஸ் நகரில் அமைந்துள்ள குறித்த ஹொட்டலில் தங்கியதாகவும்,

இரவில் தம்மை வந்து சந்தித்த நெய்மார், தொடர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது உணர்ச்சிவயப்பட்ட நெய்மார் தமது சம்மதம் இல்லாமலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரான்ஸ் பொலிசாரிடம் புகார் செய்யாமல் பிரேசிலுக்குத் தான் திரும்பியதாகவும் இந்த நிகழ்வு தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் வெளிநாட்டில் புகார் அளிக்க பயமாக இருந்ததாகவும் அவர் புகாரில் கூறியிருந்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers