பிரான்சில் ஜிகாதி படை..! லியோன் தாக்குதல்தாரி அளித்த பகீர் வாக்குமூலம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டின் லியோன் நகரில் பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரி பொலிஸ் விசாரணையில் தாக்குதல் நடத்தியதற்கான காரணத்தை தெரிவித்துள்ளான்.

கடந்த 24ம் திகதி லியோன் நகரில் பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 14 பேர் காயமடைந்தனர். தாக்குதல்தாரியின் புகைப்படத்தை வெளியிட்டு தீவிரமாக தேடி வந்த பொலிசார், முக்கிய சந்தேக நபரான முகமது ஹிக்கெம் மெடஜவுப் என்ற 24 வயதான அல்ஜீரிய இளைஞரை கைது செய்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் அவன் தாக்குதலில் ஈடுபட்டதற்கான காரணத்தை கூறியுள்ளான், தான் தாக்குதல் நடத்த குறித்த திகதி-யை தெரிவு செய்ய காரணம், மே 26ம் திகதி ஐரோப்பிய தேர்தரலில் இடதுசாரிகளின் வாக்குகளை அதிரிக்கவே. பிரான்சின் எப்.என் காட்சியால் மட்மே ஒரு நாள் பிரான்ஸை போருக்கு கொண்டு செல்ல முடியும், குறிப்பாக இஸ்லாமிற்கு எதிராகும். இதன் மூலம் நாடு பலவீனமாகும்.

நான் பிரான்சில் ஜிகாதியாக கட்டமைக்க வேண்டும் என நினைத்தேன். எனினும், ஐ.எஸ்-யுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் தனியாக தான் இந்த தாக்குதலை நடத்தினேன். இந்த பார்சல் வெடிகுண்டை இரவில் வீட்டில் குடும்பத்தினர் யார் கண்களிலும் படாமல் சமையல் அறையில் வைத்து தயாரித்தேன். இதில், சக்திவாய்ந்த வெடி பொருளை பயன்படுத்தாமல், TATP என்ற சக்தி குறைந்த வெடி பொருளை பயன்படுத்தினேன். காரணம், யாரையும் கொல்வது எனது நோக்கம் இல்லை. பயப்படுத்தவே இவ்வாறு செய்தேன்.

இனியும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. தெரிந்தே தான் சிசிடிவி மூலம் உங்களுக்கு துப்புக்கொடுத்து சென்றேன். இதில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தால் அங்கு உடனிருக்கும் கைதிகளை மூளைச்சலவை செய்து ஒரு படையையே உருவாக்கும் திட்டம் வைத்திருந்தேன் என தெரிவித்துள்ளான்.

தற்போது கைது செய்துள்ள முகமது ஹிக்கெம் மெடஜவுபை தனி சிறையில் வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவன் கூறிய வாக்குமூலம் உண்மையா என்பதை கண்டறியும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers