பிரித்தானிய ராணுவ வீரர் பிரான்சில் நீரில் மூழ்கி பலி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரின்போது பிரித்தானிய, பிரெஞ்சு படைகள் முதலான கூட்டணிப்படைகள் வடக்கு பிரான்சுக்குள் நுழைந்த நாளை நினைவுகூறும் நிகழ்ச்சிகளுக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த பிரித்தானிய வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Darren Jones என்னும் பிரித்தானிய வீரர் , பிரெஞ்சு படைகள் முதலான கூட்டணிப்படைகள் வடக்கு பிரான்சுக்குள் நுழைந்த நாளை நினைவுகூறும் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நிகழ்ச்சிகளில் உதவிக் கொண்டிருக்கும்போது உயிரிழந்துள்ளார்.

Pegasus பாலத்தினருகே உள்ள வாய்க்கால் ஒன்றில் நீந்த வேண்டிய சூழல் ஏற்பட்டபோது அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.

ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் இந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.

பிரான்ஸ் பொலிசார், சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Jonesஇன் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நினைவு நாள் நிகழ்ச்சிகளுக்காக பிரித்தானிய இளவரசர் சார்லஸ், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரித்தானிய பிரதமர் தெரஸா மே ஆகியோர் பிரான்ஸ் வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers