சேவல் கூவுவது தொந்தரவா? பிரான்சிஸ் பிரச்சினைகளை அம்பலப்படுத்திய சேவலின் வழக்கு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் சேவல் கூவுவது அண்டை வீட்டாருக்கு தொந்தரவா? என்ற வழக்கில் இந்த வாரம் அந்நாட்டு நீதிமன்றம் தீரப்பளிக்கவுள்ளது.

இந்த வழக்கின் மூலம் பிரான்சின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இடையே ஏற்பட்டுள்ள பிளவுகள் அம்பலமாகியுள்ளது.

பிரான்சின் மேற்கு கரையோரத்திற்கு அருகே அமைந்திருக்கும் பியர்-டி ஓலெர்ன் தீவை சேர்ந்த கொர்னே பெஸீவ் என்ற பெண், நீதிமன்றத்தில் தனது சேவலுடன் ஆஜராகும் படி சம்மன் வந்துள்ளது. கொர்னே பெஸீவ்வின் சேவல், விடுமுறை தினங்களில் விடியும் முன் கூவி தொந்தரவு தருவதாக அண்டை வீட்டர் அளித்த புகாரை அடுத்து நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கு அனைவரது கவனத்தை ஈர்க்க முக்கிய காரணம், சேவல் பிரான்சின் சின்னமாகும். அதே சமயம், புகார் அளித்தவர் நகரப்புறத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் விடுமுறைக்கு மட்டும் பியர்-டி ஓலெர்ன்-ல் உள்ள தனது மற்றொரு வீட்டிற்கு வருவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேவலின் உரிமையாளர் கொர்னே பெஸீவ் கூறியதாவது, அவர்கள் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே இந்த தீவுக்கு வருவார்கள். நான் இங்கேயே 35 வருடங்களாக இருக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

பிரான்சின் நகர்ப்புற பகுதியில் வாழும் பல வசதியானவர்களுக்கு கிராமப்புறங்களிலும் மற்றொரு வீடு சொந்தமாக இருக்கும். ஆனால், இதனால், கிராமப்புற பாரம்பரிய வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது வேதனையாக இருப்பதாக பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று சேவல், நாளை என்ன? கடற்பறவையா? அடுத்தது காற்றின் சத்தமா? எங்கள் உச்சரிப்புகளா? என செயிண்ட்-பியர்-டி ஓலெர்ன் மேயர் கிறிஸ்டோப் சூயூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வழக்கின் மூலம் கஜாக் ப்ரூனோ டியோனிஸ் டூ சீஜரின், மேயர், கலச்சார அமைச்சகத்திற்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அதில், நாட்டின் பாரம்பரிய தளங்களுக்கும், கிராமப்புறங்களில் மாடுகள், கழுதைகள் மற்றும் பறவைகள் எழுப்பும் ஓலி அது அந்த உயிரினங்களின் உரிமை, அதை பாதுகாக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்