தோல்வியில் முடிந்த டி.என்.ஏ சோதனை... கொலைகாரனை சிக்கவைத்த சிகரெட் லைற்றர்: விலகிய மர்மம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

வடக்கு பிரான்ஸின் சாலையோரம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் இந்திய நபருடையது என உறுதி செய்யப்பட்டதாக அங்குள்ள பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் பாக்கெட்டில் இருந்த சிகரெட் லைற்றர் மூலம் கொலையாளியை கண்டுபிடித்ததாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய கொலையில், பெல்ஜியத்தைச் சேர்ந்த மற்றொரு இந்தியர்தான் கொலையாளி என்பதைக் கண்டுபிடிக்க அந்த ஒரே ஒரு சிகரெட் லைட்டர்தான் உதவியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சாலையோரம் இருந்த கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்த போது அங்கே அழுகிய நிலையில் இருந்த இந்தியரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது ஆடையில் வேறு எந்த ஆவணங்களோ, செல்போனோ இல்லாத நிலையில், சட்டை பையில் இருந்து சிகரெட் லைற்றர் மட்டுமே ஒரே ஒரு தடயமாக சிக்கியது.

உயிரிழந்தவரின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க டிஎன்ஏ பரிசோதனைகளும், கைரேகையும் உதவவில்லை.

ஒரே ஒரு தடயமான சிகரெட் லைற்றரில் "Kroeg Cafe" என்று எழுதப்பட்டிருந்தது. அதை வைத்துத்தான் விசாரணையே தொடங்கியது.

விசாரணையில் அந்த லைற்றர் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் உள்ள பப்களில் பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது.

பெல்ஜியம் காவல்துறைக்கு லைற்றரின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நடந்த விசாரணையில், பெல்ஜியத்தில் இருந்த ஒரு பப்புக்கு அருகே வாழ்ந்து வந்த இந்தியரான 42 வயது தர்ஷன் சிங் கடந்த ஜூன் மாதம் முதல் மாயமானது தெரிய வந்தது.

அவரது டூத் பிரஷ்ஷில் இருந்த டிஎன்ஏவுடன் ஒப்பிட்டுப் பார்த்ததில், இறந்தவரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, இவரைக் கொன்றதாக மற்றொரு இந்தியரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers