பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் முந்திய பிரான்ஸ்: எதில் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அந்நிய முதலீட்டில் பிரித்தானியாவையும் ஜேர்மனியையும் பிரான்ஸ் முந்தியுள்ளதைத் தொடர்ந்து, தாங்கள் பிற நாடுகளுடனான வர்த்தகத்தை வரவேற்க தயாராக இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் பெருமையுடன் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரபல நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் 144 பெரிய ஆய்வு மற்றும் முன்னேற்ற ஒப்பந்தங்கள், (2017-லிருந்து 85 சதவிகித உயர்வு) 339 உற்பத்தி புராஜக்டுகள் என, ஜேர்மனியையும் பிரித்தானியாவையும் பின்னுக்கு தள்ளி, முதல் முறையாக பிரான்ஸ் அந்நிய முதலீட்டில் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நிய முதலீடு ஒப்பந்தங்களின் மொத்த எண்ணிக்கை ஒரு சதவிகிதம் மட்டுமே உயர்ந்தாலும், மற்ற ஐரோப்பிய நாடுகள் வீழ்ச்சி அடைந்த அளவுக்கு பிரான்சின் அந்நிய நேரடி முதலீடு வீழ்ச்சி அடையவில்லை.

இதற்கிடையில் பிரெக்சிட் பிரச்சினையில் சிக்கியுள்ள பிரித்தானியா, முதலிடத்தை தக்க வைக்க முடியாமல் 13 சதவிகிதம் சறுக்கியது.

சற்றும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட விரும்பாத இமானுவல் மேக்ரான், ட்விட்டரில் அந்நிய முதலீடுகள் மற்றும் திறமைகளுக்கு வழி விடுவதில் பிரான்ஸ் முன்னணியில் இருக்கிறது என்று எழுதினார்.

கடந்த ஆண்டில் வெடித்துக் கிளம்பிய மஞ்சள் மேலாடை போராட்டங்கள் பிரான்ஸ், மீதான அந்நிய முதலீடு குறித்த ஈர்ப்பை பாதிக்கும் என பல அரசு அதிகாரிகள் கவலையில் இருந்தனர்.

என்றாலும் சமீப வாரங்களாக குறிப்பிடத்தக்க அளவில் போராட்டங்கள் குறைந்துள்ளன. EY என்னும் அந்த வர்த்தக ஆலோசனை அமைப்பு, பாரீஸ் தற்போது ஐரோப்பிய நகரங்களிலேயே அந்நிய முதலீட்டைக் கவர்வதில் லண்டனையும் பெர்லினையும் தாண்டி முன்னிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்