சிரியாவில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்படும் 12 சிறுவர்கள்!

Report Print Arbin Arbin in பிரான்ஸ்
166Shares

சிரியாவின் தடுப்பு முகாமில் உள்ள 12 சிறார்கள் பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள குருதிஷ்ய மக்கள் வசிக்கும் ஒரு முகாமில் இருந்து இவர்கள் பிரான்சுக்கு அழைத்துவரபட்டுள்ளனர்.

சமீபத்தில் சிரியாவில் பிரெஞ்சு பயங்கரவாதிகளுக்கு நீதிமன்றத்தால் தொடர்ச்சியாக மரண தண்டனை வழங்கபட்டு வருகிறது.

அவ்வாறு மரண தண்டனைக்கு உள்ளான பிரெஞ்சு பயங்கரவாதிகளின் பிள்ளைகள் தாம் இவர்கள் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு பாரிசில் உள்ள Villacoublay விமான நிலையத்தில் அவர்கள் வந்தடைவார்கள் என தெரிவிக்கபட்டிருந்தது.

1 வயதில் இருந்து 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவர்கள் என தெரியவந்துள்ளது. சிரியாவில் இருந்து 12 பிரெஞ்சு சிறுவர்களுடன் மேலும் இரு டச் சிறுவர்களும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்