பிரான்சின் பிரபல ஓவியம் வரையும் ஒராங்குட்டானுக்கு 50 வயது!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் மிக பிரபலமான ஓவியம் வரையும் ஒராங்குட்டான் 50 வயதை எட்ட இருக்கிறது.

பாரீஸிலுள்ள Jardin des Plantes வனவிலங்குகள் பூங்காவில் வசிக்கும் Nenette என்னும் அந்த ஒராங்குட்டான் வகை குரங்கு, ஓவியங்கள் வரைவதால் பிரபலமானது. Borneoவில் பிறந்த Nenette, மூன்று வயதாக இருக்கும்போது, 1972ஆம் ஆண்டு இந்த வனவிலங்குகள் பூங்காவிற்கு வந்தது.

பயிற்றுவிக்கப்படாமலே ஓவியம் வரைய ஆரம்பித்த Nenette, கிரேயான், வாட்டர் கலர் என எதையும் பயன்படுத்தி ஓவியம் வரைய ஆரம்பித்தது.

1999இல் வனவிலங்குகள் பூங்காவில் வேலைக்கு சேர்ந்த Christelle Hano என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக Nenetteஐ கவனித்து வருகிறார்.

ஒராங்குட்டான்களுக்கு ஒரு உறைவிடம் உருவாக்குவதற்காக, பணம் சேகரிப்பதற்காக, Nenette வரைந்த ஓவியங்களை விற்பனை செய்தபோது, ஒரு ஓவியம், ஆயிரக்கணக்கான யூரோக்களுக்கு விலைபோனது குறிப்பிடத்தக்கது.

நாளை வனவிலங்குகள் பூங்காவில் Nenette தனது 50ஆவது பிறந்த நாளை பெரிய அளவிலான பார்ட்டியுடன் கொண்டாட இருக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers