பிரான்ஸ் மீது ஐரோப்பிய ஆணையத்தில் புகார்.. கடும் கோபத்தில் ஓரின சேர்க்கையாளர்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் பாலியல் சார்பு அடிப்படையில் சட்டவிரோதமாக பாகுபாடு காட்டப்படுவதாக ஓரின சேர்க்கையாளர்கள் உரிமைகள் குழு ஐரோப்பிய ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

பிரான்சில் ஓரின சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்ய கடந்த 30 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடை 2016 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. ஆனால், எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் 12 மாதங்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருப்பவர்கள் மட்டுமே இரத்த தானம் வழங்க முடியும் என்ற விதியுடன் குறித்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விதி இன்னும் நடைமுறையில் உள்ளதால் 93.8 சதவிகித ஓரின சேர்க்கையாளர்கள் இரத்த தானம் செய்வதிலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள் என எல்ஜிபிடி அதிகாரிகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரான்ஸில் பாலியல் சார்பு அடிப்படையில் சட்டவிரோதமாக பாகுபாடு காட்டப்படுவதாக ஓரின சேர்க்கையாளர்கள் உரிமைகள் குழு ஐரோப்பிய ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

பிரான்சில் 1983 ஆம் ஆண்டு ஓரின சேர்க்கையாளர்கள் தானம் செய்த இரத்தத்தில் எச்.ஐ.வி தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அவர்கள் இரத்த தானம் செய்ய முழுமையாக தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...