பாரிஸில் கட்டிட தீ விபத்து: 3 பேர் பலி... 30 பேர் காயம்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

பாரிஸ் நகரத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

பாரீசில் 11tharrondissement பகுதியில் 1970களில் கட்டப்பட்ட ஆறு மாடி கட்டிடம் ஒன்றில், உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியதால், சம்பவ இடத்திற்கு விரைந்த 200 தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கும் பின் தீயை முற்றிலும் அணைத்துள்ளனர்.

இது குறித்து தீயணைப்பு துறையை சார்ந்த உயரதிகாரி ஃப்ளோரியன் லொயின்டியர் கூறுகையில், தீ விபத்தின் போது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக குதித்த ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீ விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த தீயானது அருகாமையில் உள்ள உணவகம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு பரவியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்