பிரான்ஸ் அரசு விதித்த தடைக்கு எதிர்ப்பு... நீச்சல் குளத்தில் முஸ்லீம் பெண்கள் போராட்டம்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

நீச்சல் குளத்தில் புர்கா அணிவதற்கு பிரான்ஸ் அரசு தடை விதித்திருப்பதை எதிர்த்து முஸ்லிம் பெண்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

முஸ்லீம் பெண்கள் தங்களுக்கான சுதந்திரத்துடன் நீச்சல் குளத்தில் குளிக்க வேண்டும் என்பதற்காக, அஹெடா சானெட்டி என்பவர் கடந்த 2004ம் ஆண்டு ஒரு ஆடையினை வடிவமைத்தார்.

இது உலகின் பல பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், 2010ம் ஆண்டு பிரான்ஸ் அரசு இதற்கு தடை விதித்தது. இந்த ஆடை மதச்சார்பின்மை குறித்த பிரான்ஸ் சட்டங்களை மீறுவதாகவும், பொது அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இது முஸ்லீம் சமூகங்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் அரசின் இந்த நடவடிக்கையை ஐ.நா மனித உரிமைகள் குழு, அடிப்படை சிவில் உரிமைகளை "மீறியதாக" விமர்சித்தது.

இந்த நிலையில் புர்கா தடையை எதிர்த்து முஸ்லீம் பெண்கள் சிலர், நீச்சல் ஆடையினை அணிந்து கிரெநோபிள் பகுதியில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதனை அறிந்த பொலிஸார் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers