பிரான்சில் தாங்க முடியாத வெயில்: பள்ளிகளுக்கு விடுமுறை, ரயில் சேவை தாமதம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தாங்க முடியாத வெப்பம் நிலவுவதையொட்டி சிறுவர் சிறுமியரை வெயிலிலிருந்து பாதுகாப்பதற்காக ஏராளமான பள்ளிகள் மூடப்படுவது முதல் பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

பாரிசுக்கு தெற்கே அமைந்துள்ள Essonne பகுதியில் மட்டுமே சுமார் 50 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அந்த பள்ளிகளில் போதுமான அளவில் குளிரூட்டும் வசதிகளும் இல்லை.

Val-de-Marne மற்றும் Seine-et-Marne பகுதிகளில் உள்ள பள்ளிகளும் மூடப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மட்டு மீறிய வெப்பத்திற்கு காரணம் சஹாரா பாலைவனத்திலிருந்து வீசும் வெப்பக் காற்றாகும்.

தேசிய வானிலை ஆராய்ச்சி மையம், நாளை நாட்டின் தெற்கு பகுதிகளில் வெப்பநிலை 38Cக்கும் 41Cக்கும் இடையில் இருக்கும் என்றும் Rhône பள்ளத்தாக்கில் 42Cக்கும் 44Cக்கும் இடையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் அதிக வெப்பம் காரணமாக சில தடங்களில் ரயில்கள் மெதுவாக செல்லும் என்றும் அதனால் தாமதங்கள் ஏற்படலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் ரயில் பாதைகளில் அதிக வெப்பம் காரணமாக விரிசல் ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்