பிரான்சில் ஆபத்தின் விளிம்பில் 25 ஆயிரம் மேம்பாலங்கள்! வெளியான அறிக்கை

Report Print Kabilan in பிரான்ஸ்
164Shares

பிரான்சில் உள்ள 25,000 மேம்பாலங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக, செனட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இத்தாலியில் உள்ள Genoa என்ற மேம்பாலம் கடந்த 2018ஆம் ஆண்டு இடிந்து விழுந்தது. இதனைத் தொடர்ந்து பிரான்சில் உள்ள மேம்பாலங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி பிரான்சில் உள்ள மேம்பாலங்கள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் சுமார் 25,000 மேம்பாலங்கள் பயன்படுத்த தகுதியற்றது அல்லது உடையும் தருவாயில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது.

மேலும், பிரான்சில் மொத்தமாக உள்ள 2,00,000 மேம்பாலங்களில் 2,50,000 சிறிய மேம்பாலங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை செனட் சபை உறுப்பினர் Herve Maurey தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேம்பாலங்கள் தொடர்பான பராமரிப்பு, ஆராய்ச்சிகளுக்காக மிக அதிகமாக செலவு செய்யப்படுவதாகவும், வருடத்திற்கு 40 மில்லியன் யூரோக்களாக இருந்த இந்த தொகையானது, தற்போது வருடத்திற்கு 120 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை இதற்காக நமக்கு அவசரகால திட்டம் ஒன்றும் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்