பிரான்சில் வரலாறு காணாத அளவில் பதிவான வெப்பம்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் நேற்றைய தினம் வரலாறு காணாத அளவில் வெப்பம் பதிவானதாக Meteo France அறிவித்துள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு பிரான்சின் Lezignan-Corbieres(Aude)யில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதுவே அந்நாட்டில் பதிவான அதிகப்படியான வெப்பமாக இருந்தது.

இந்நிலையில், Gard மாவட்டத்தில் உள்ள Saint-Julien-di-Peyrolas நகரில் 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் நேற்றைய தினம் பதிவானது. ஒரு ஜூன் மாதத்தில் முன்பு எப்போதும் இந்த அளவு வெப்பம் பதிவாகவில்லை.

எனவே, பிரான்ஸ் வரலாற்றில் இது தான் பதிவான அதிகப்படியான வெப்பம் என்று Meteo France அறிவித்துள்ளது. எனினும், இன்றைய தினம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்