4000 பள்ளிகள் மூடல்.. பிரான்ஸ் பிரதமர் அதிரடி அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக 4000 பள்ளிகள் மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக பிரான்சில் 4,000 பள்ளிகள் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அந்நாட்டு பிரதமர் எட்வார்ட் பிலிப் அறிவித்துள்ளார்.

பிரான்சில் 2004 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட்டை அடுத்து, தற்போது, தெற்கு பிரான்சின் ஹெரால்ட், கார்ட், வாக்ளஸ் மற்றும் பூச்சஸ்-டு-ரோன் ஆகிய பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் சில பகுதிகளில், குறிப்பாக தெற்கு பகுதிகளில், வெள்ளிக்கிழமை வெப்பம் 45 டிகிரி செல்சியஸ் அடையக்கூடும் என எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமடைதலின் விளைவாக இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் வழக்கமாகிவிடக்கூடும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். நாம் நமது அமைப்பை, வேலை செய்யும் முறையை, வித்தியாசமாக கட்டமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers