பாரிசில் மூன்று பொலிசாரை சரமாரியாக தாக்கிய கும்பல்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் விடுதி ஒன்றில் வைத்து தாக்கப்பட்டனர்.

பாரிசின் 19ஆம் வட்டாரத்தில் Pegna என்ற இரவு விடுதி உள்ளது. இந்த விடுதியில் நேற்றைய தினம், 5 பேர் கொண்ட கும்பல் மூன்று பொலிஸ் அதிகாரிகளை சரமாரியாக தாக்கியுள்ளது.

குறித்த பொலிசார் கீழே தள்ளப்பட்டு, காலால் மிதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து அறிய முடியவில்லை.

இதற்கிடையில், தாக்குதலுக்குள்ளான அதிகாரிகளில் ஒருவர் சுயநினைவு இழந்து மயங்கியதாக தெரிய வந்தது. அவர் பலத்த காயமடைந்ததாகவும், அவருடன் சேர்ந்து மற்ற இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...