இன்று முதல் பிரான்சில் அமுலுக்கு வரும் மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஜூலை மாதம் பிறந்துள்ள நிலையில், இன்று முதல் பிரான்சில் அமுலுக்கு வரும் மாற்றங்கள் என்ன என்று பார்க்கலாம்.

டீசல் வாகனங்களுக்கு தடை

ஜூலை 1ஆம் திகதியிலிருந்து பழைய டீசல் கார்கள் மத்திய பாரீஸில் இயக்கப்படுவதற்கு தடை விதிக்கப்படும்.

அதிக மாசு ஏற்படுத்தும் என்பதைக் காட்டும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ள வாகனங்கள், காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை Paris ringroad பகுதிக்குள் அனுமதிக்கப்படமாட்டாது.

பாரீஸில் வாடகை கட்டுப்பாடுகள்

பிரான்ஸ் தலைநகரில் மீண்டும் வாடகை கட்டுப்பாடுகள் கைக்கொள்ளப்பட இருக்கின்றன.

2017இல் வாடகை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாடகை பயங்கரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக புகார் வந்ததையடுத்து மீண்டும் ஜூலை ஒன்றிலிருந்து வாடகை கட்டுப்பாடுகள் கைக்கொள்ளப்பட இருக்கின்றன.

டீசல் கார்களுக்கு கடுமையான மாசு கட்டுப்பாட்டு சோதனைகள்

சில கார்கள் பாரீஸிலிருந்து தடை செய்யப்பட உள்ளதோடு, டீசல் கார்களுக்கான மாசுக் கட்டுப்பாடு சோதனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்