பிரான்சில் 14 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை... வெளியான முழுத் தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் சில பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளதால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இன்று நாட்டில் சில பிராந்தியங்களில் கடும் வெப்பமும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பிருக்கிறது.

குறிப்ப்பாக, Alpes-Maritimes, Var, Bouches-du-Rhone, Herault, Vaucluse, Gard, Ardeche, Drome ஆகிய எட்டு மாவட்டங்களில் அதிகளவான வெப்பம் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Rhone,Savoie, Haute-Savoie, Ain,Isère ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனவும், Loire மாவட்டத்தில் அதிகளவான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்