ஒரு புகைப்படத்தால் கேலி கிண்டலுக்குள்ளான முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி: வேடிக்கை பின்னணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி புகைப்படம் ஒன்றின் அட்டைப்படத்திற்கு கொடுத்துள்ள போஸ், பயங்கர கேலி கிண்டலுக்குள்ளாகியிருக்கிறது.

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி, சமீபத்தில் தனது மனைவியுடன் பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.

அதில் நிக்கோலஸ் சர்கோசியின் மனைவி, அவரது தோளில் சாய்ந்திருப்பதுபோல அட்டைப்படம் வெளியானது.

கிட்டத்தட்ட அந்த படத்தைப் பார்த்த எல்லோருமே குபீரென சிரித்து விட்டார்கள்.

இதில் என்ன வேடிக்கை இருக்கிறது என்று எண்ணலாம்.

உண்மை என்னவென்றால் நிக்கோலஸ் சர்கோசி 1.66m (5ft5in) உயரமுடையவர். அவரது மனைவி கார்லா ப்ரூனியின் உயரம் 1.75m (5ft9in), அதாவது சர்கோசியைவிட, கார்லா 10 சென்றிமீற்றர் அதிக உயரம் கொண்டவர்.

பத்திரிகைகள் இந்த படத்தை கேலி செய்து படங்களை வெளியிட்டு வருகின்றன.

சர்கோசி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும்போது அல்லது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா போன்றோரின் அருகில் நிற்க நேரும்போது, அவசர அவசரமாக பெட்டிகளை போட்டு அதன் மீது ஏறி நிற்பார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாக இருக்கும் நிலையில், மனைவியை விட உயரமாக தெரியும் விதம் அவர் கொடுத்துள்ள போஸ் கேலிக்குள்ளாகியிருக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...