நாட்ரி டாம் தேவாலய பணியில் இணைந்து கொள்ள விரும்பும் இஸ்லாமியர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தீக்கிரையான நாட்ரி டாம் தேவாலயத்தை கட்டி எழுப்பும் பணியில் இணைந்து கொள்ள பிரான்ஸ் நாட்டு இஸ்லாமியர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தீக்கிரையான நாட்ரி டாம் தேவாலயத்தை கட்டி எழுப்புவது தொடர்பான கூட்டம் ஒன்றில் கத்தோலிக்கர்களுடன் தங்கள் ஆதரவைக் காட்டும் வகையில் இஸ்லாமியர்களும் கலந்து கொண்டனர்.

தேவாலயம் தீப்பிடிப்பதற்கு கொஞ்ச காலம் முன்புதான் அன்னை மேரியைக் குறித்த நிகழ்வொன்றில் தாங்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கும் Amrina Darmsy Ladha என்னும் ஷியா பிரிவு இஸ்லாமியர், பின்னர் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், கிறிஸ்தவ சமுதாயத்திற்கு நமது ஆதரவைத் தெரிவிப்பது எப்படி என தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டதாக் தெரிவிக்கிறார்.

அவரைப்போலவே, ஷியா மற்றும் சன்னி பிரிவுகளை சேர்ந்த பலரும் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான ஐக்கியத்திற்காக ஒன்று கூடியிருக்கிறோம் என்று கூறும் Zahra Mohamed Ali, எங்களுக்கு பிரான்சில் அமைதி வேண்டும், நாங்களும் அன்னை மேரியுடன் உள்ளோம் என்கிறார்.

அவரது மகள் Malika கூறும்போது, தேவாலயம் எரியும் புகைப்படங்களைக் கண்டபோது தான் மிகவும் கவலையடைந்ததாக தெரிவிக்கிறார்.

நாட்ரி டாம் தேவாலயம் என்பது ஒரு அடையாளம், சுற்றுலாப்பயணிகள் பாரீஸுக்கு வரும்போது, அவர்கள் ஈபிள் கோபுரத்தைக் காண விரும்புவது உண்மைதான், ஆனால் அதைவிட தேவாலயம் முக்கியம் என்கிறார்.

Malikaவின் வார்த்தைகள், நாட்ரி டாம் என்பது பாரீஸிலுள்ள கத்தோலிக்கர்களின் தேவாலயம் மட்டும் அல்ல, அது அதை விட அதிகம் என்ற Bishop Jachietஇன் வார்த்தைகளை பிரதிபலிப்பதாக உள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்