பிரான்சில் சூழலியல் துறை அமைச்சராக எலிசபெத் போர்னே தெரிவு!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சில் சூழலியல் அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எலிசபெத் போர்னே அப்பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் சூழலியல் அமைச்சராக பதவி வகித்து வந்த Francois de Rugy, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எலிசபெத் போர்னே, சூழலியல் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டார். எனினும், அவர் போக்குவரத்துத் துறையையும் கவனித்துக் கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை எலிசே மாளிகை வெளியிட்டுள்ளது. புதிய பதவியை ஏற்ற எலிசபெத் கூறுகையில், ‘அரசு என் மீது நம்பிக்கை வைத்து பொறுப்புக்களை தருவது பெருமையாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

எலிசபெத் போர்னே கடந்த இரண்டு ஆண்டுகளாக எத்துவா பிலிப் தலைமையிலான அமைச்சரவையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ludovic MARIN/AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...