கடலில் விழுந்த பிரான்சின் பறக்கும் மனிதன்: தோல்வியில் முடிந்த பயணம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
612Shares

பிரான்சின் பறக்கும் மனிதன், பறக்கும்போதே எரிபொருள் நிரப்ப முயற்சிக்கும்போது ஆங்கிலக் கால்வாயில் விழுந்ததால் அவரது பயணக் கனவு தோல்வியில் முடிந்தது.

பிரான்சின் பறக்கும் வீரர் என்று அழைக்கப்படும் Franky Zapata (40) பிரான்சின் தேசிய தினத்தன்று பிரான்ஸ் ஜானாதிபதி இமானுவல் மேக்ரான், ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் முதலான உலக தலைவர்கள் முன் தனது கண்டுபிடிப்பான குட்டி இயந்திரம் ஒன்றின் உதவியுடன் பறந்து அசத்தியது நினைவிருக்கலாம்.

பின்னர் Zapata தனது flyboard என்னும் கருவியின் உதவியுடன் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் இன்று இறங்கினார்.

வட பிரான்ஸ் கடற்கரையின் Sangatteயிலிருந்து புறப்பட்ட அவர் 20 நிமிடங்களில் Doverஐச் சுற்றி பிரித்தானியாவில் இறங்க முடிவு செய்திருந்தார். ஆனால் Zapata பறக்கும்போதே எரிபொருள் நிரப்ப முயற்சிக்கும்போது தனது பறக்கும் போர்டிலிருந்து தவறி விழுந்தார்.

உடனடியாக உதவிக் குழுவினரால் மீட்கப்பட்ட அவர், கடலில் விழுந்ததால் எந்த சேதமுமின்றி தப்பினார்.

உடல் ரீதியாக அவர் நலமாக இருந்தாலும், அவரது முயற்சி தோல்வியடைந்ததால் அவர் மிகவும் எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகவும் அவரது குழுவினர் தெரிவித்தனர்.

தனது பறக்கும் இயந்திரத்தை, Zapata ராணுவத்திற்கு விற்க முடிவு செய்துள்ள நிலைமையில், அவரது முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்