பாரிஸ் நீச்சல் குளத்தில் ஏழு சிறுமிகள் மீது பாலியல் சீண்டல்..!

Report Print Kavitha in பிரான்ஸ்

பரிசில் நீச்சல் தடாகம் ஒன்றில் வைத்து குளித்துக்கொண்டிருந்த ஏழு சிறுமிகள் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள Aquaboulevard தனியார் நீச்சல் தடாகத்தில் இடம்பெற்றுள்ளது.

வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் Aquaboulevard நீச்சல் தடாகத்தில் குளித்துக்கொண்டிருந்த ஏழு சிறுமிகளிடம் நபர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்டுள்ளார்.

அதுமட்டுமின்றி இவர் அவர்கள் ஆடை மாற்றும் அறைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அதன்பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோர்களிடம் முறையிட்டதை அடுத்து, அவர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை காலை குடும்பத்தினர் தொடுத்திருந்த வழக்கின் அடிப்படையில், குறித்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers