தீவிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியார்கள் உட்பட 180 பேர்.. நாடு திரும்ப முடியாமல் துயரம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் மத்திய தரைக்கடல் தீவான கோர்சிகாவில் இருந்து நாடு திரும்ப முடியாமல், பிரித்தானியா சுற்றலா பயணிகள் உட்பட 180 பேர் சிக்கி தவிக்கிறார்கள்.

மோசமான வானிலை காரணமாக விமானம் நைஸுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி சுற்றுலா பயணிகள் நாடு திரும்ப பல நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகறிது.

கோர்சிகா ஃபிகாரியில் இருந்து புறப்படும் விமானம் ரத்து செய்யப்பட்டது என ஏர்லைன் ஈஸிஜெட் உறுதிப்படுத்தியுள்ளது.

விமானம் ரத்து செய்யப்பட்டதாக தொடர்பாக ஏர்லைன் நிறுவனம் வெளியிட்ட தகவலில், விமானம் ரத்து செய்யப்பட்டதற்கு நாங்கள் வருந்துகிறோம்.

ஃபிகாரியில் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் நைஸுக்கு திருப்பி விடப்பட்டது. இன்னும், வானிலை மேம்படுத்தப்படாததால், துரதிர்ஷ்டவசமாக உங்கள் விமானத்தை ரத்து செய்ய வேண்டியிருந்தது. இடையூறு எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது மற்றும் இது ஒரு அசாதாரண சூழ்நிலையாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

நாடு திரும்ப முடியாமல் தீவில் சிக்கி தவிக்கும் சுற்றுலா பயணிகள் விமான நிறுவனத்தை கடுமையாக சாடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers