பிரான்சில் குடியிருப்பு உரிமம் பெற காத்திருந்த நபருக்கு கிடைத்த கடைசி நேர ஏமாற்றம்: பேஸ்புக் கருத்தால் வந்த வினை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் குடியிருப்பு உரிமம் பெற காத்திருந்த நபர் ஒருவருக்கு, அவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த கருத்துக்களால் கடைசி நேரத்தில் குடியிருப்பு உரிமம் மறுக்கப்பட்டது.

தனது குடியிருப்பு உரிம நீட்டிப்பு ஏற்கனவே மறுக்கப்பட்டிருந்த நிலையில், மொராக்கோவைச் சேர்ந்த அந்த நபர் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.

அவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் எனக்கூறி அவரது மேல்முறையீட்டை நிராகரித்ததோடு, இன்னும் ஒரு மாதத்திற்குள் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த நபர் தனது நடத்தையாலும், வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் பொது அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவர் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து மேற்கத்திய கலாச்சாரத்துக்கு எதிரானதாகவும், சதித்திட்டம் தீட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளதாகவும், பிரெஞ்சு சமுதாயத்திற்கு எதிரானதாகவும் அமைந்திருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அவர், தான் துப்பாக்கியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தையும், பொது இடங்களில் அல்லது பொது போக்குவரத்தின்போது பெண்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருந்தார்.

ஏற்கனவே பிரான்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த நபர் பொலிசாருக்கு அறிமுகமானவரும் கூட, ஆனால் அவர் மீது எந்த குற்றமும் பதிவு செய்யப்படாமலிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers