பிரான்சில் உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய பிரித்தானியர்... நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் நீச்சல் குளம் ஒன்றில் மூழ்கிய சிறுமியை சுற்றுலாப்பயணிகள் கப்பாற்றியுள்ள சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Val-d'Oise மாவட்டத்தின் Nesles-la-Vallee நகரில் இருக்கும் நீச்சல் குளம் ஒன்றில், நான்கு வயது சிறுமி ஒருவர் குளித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று நீரில் மூழ்கி உயிருக்கு போராடியுள்ளார்.

இதைக் கண்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப்பயணியும், பிரித்தானியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவரும் நீரில் குதித்து அந்த சிறுமியை காப்பாற்றியுள்ளனர்.

நீரில் சிக்கி உயிருக்கு போராடிய சிறுமியை காப்பாற்றிய இருவரையும் அங்கிருந்தவர்கள் பாராட்டினர். அதன் பின் உடனடியாக சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமியின் உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers