40,000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம்: பிரான்ஸ் வங்கி கூட்டமைப்பு எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அமெரிக்க வரி ஒழுங்குமுறைகளால் ஏற்பட்டுள்ள ஒரு சிக்கலையடுத்து 40,000 அமெரிக்கர்களின் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு வங்கிகள் எச்சரித்துள்ளன.

பிரான்ஸ் வங்கி கூட்டமைப்பின் தலைவரான Laurent Mignon பிரான்ஸ் நிதி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், உலகம் முழுவதிலுமுள்ள வங்கிகள் அனைத்தும் அமெரிக்க குடிமக்களின் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டது குறித்து விவரித்துள்ளார்.

அமெரிக்கர்கள் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்ட அந்த சட்டம், மற்ற நாடுகளில் வாழும் அமெரிக்கர்களையும், ’தற்செயல் அமெரிக்கர்களையும்’ சிக்கலுக்குள்ளாக்கியிருக்கிறது.

அதன்படி, பிரெஞ்சு வங்கிகள் இந்த விடயத்தில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால், பிரெஞ்சு வங்கிகளின் அமெரிக்க வருவாயில் 30 சதவிகிதத்தை அபராதமாக கட்ட நேரிடும் என்பதால், இது பிரெஞ்சு வங்கிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பிரெஞ்சு வங்கிகள் தங்களிடம் கணக்கு வைத்திருக்கும் அமெரிக்கர்களின் அமெரிக்க வரி எண்ணை அமெரிக்காவிடம் அளிக்க வேண்டும்.

ஆனால் தாங்கள் அமெரிக்காவில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்பதை குறித்து அறவே அறிந்திராத தற்செயல் அமெரிக்கர்களுக்கு அமெரிக்க வரி எண்ணே கிடையாது.

பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையை அடுத்து, தற்போது ஒரு குறுகிய கால சலுகை பிரான்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்கர்களின் அமெரிக்க வரி எண்ணைக் கொடுக்க முடியவில்லையென்றால், அவர்களின் பிறந்த திகதியையாவது தெரிவிக்க வேண்டும், அதுவும் இந்த சலுகை 2019 டிசம்பர் 31 வரைதான்.

அதற்குப் பிறகு, பிரான்ஸ் வங்கிகளுக்கு தற்செயல் அமெரிக்கர்கள் சுமார் 40,000பேரின் வங்கிக் கணக்குகளை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று Laurent Mignon தெரிவித்துள்ளார்.

இந்த தற்செயல் அமெரிக்கர்கள் யாரென்றால், தங்களுக்கு அமெரிக்க குடியுரிமையும் இருப்பது தெரியாமலே வாழும் பிரான்ஸ் நாட்டு குடிமக்கள்.

அதாவது, தாங்கள் பிறந்து சில நாட்களுக்குள்ளாகவே அமெரிக்கவிலிருந்து பிரான்சுக்கு வந்து குடியேறியவர்கள், அதாவது பெற்றோருடன்.

ஆனால், அமெரிக்காவில் பிறந்தாலோ அல்லது அமெரிக்க தாய்க்கோ தந்தைக்கோ பிறந்தாலோ ஒருவர் தானாகவே அமெரிக்க குடிமகன் ஆகிவிடுவார்.

எனவே அவர்கள் அமெரிக்கவில் வாழவில்லை என்றாலும், ஏன் அமெரிக்காவுக்கே சென்றதில்லை என்றாலும் கூட, அவர்கள் வருமான வரி தாக்கல் செய்தே ஆகவேண்டும்.

இது பிரான்சில் வாழும் பலருக்கு தெரியாது. எனவே இதனால் பலருக்கும் பெரிய பிரச்சினைகள் ஏற்பட உள்ளன என்பது மட்டும் தற்போதைக்கு உண்மை.

என்றாலும் இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers