பிரான்சில் நடந்த ராட்சத பலூன் திருவிழா.. தோல்வியில் முடிந்த உலக சாதனை!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ராட்சத ஹாட் பலூன் திருவிழாவில், புதிய உலக சாதனை படைக்க நினைத்த முயற்சி தோல்வியடைந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் ராட்சத ஹாட் பலூன் திருவிழா, பிரான்சின் மெட்ஸ் நகரில் கடந்த வாரம் தொடங்கியது.

ஏராளமானோர் வானில் பல்வேறு வண்ணங்களில் தங்களது ராட்சத பலூன்களை பறக்க விட குவிந்தனர். சுமார் 500 பலூன்களை பறக்கவிட்டு புதிய உலக சாதனை படைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால், ஒரு மணிநேரத்தில் 456 பலூன்கள் மட்டுமே பறக்க விடப்பட்டதால், புதிய உலக சாதனை முயற்சி தோல்வியடைந்தது.

கடந்த ஆண்டு நடந்த ராட்சத பலூன் திருவிழாவில், ஒரு மணிநேரத்திற்குள்ளாக 456 பலூன்கள் பறக்கவிடப்பட்டது உலக சாதனையாக கருதப்படுகிறது.

எனினும், ஒரே நேரத்தில் 400க்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டதை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers