127 ஆண்டுகளுக்கு முன் இறந்தவருக்கு தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும் கடிதங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் 127 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஒருவருக்கு இன்றும் கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதாகவும், வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை, தான் அவரது கல்லறைக்கு சென்று கடிதங்களை பட்டுவாடா செய்து வருவதாகவும் அப்பகுதி தபால்காரர் தெரிவித்துள்ளார்.

அப்படி இன்று வரை மக்கள் தொடர்ந்து கடிதம் எழுதி வரும் நபர் ஒரு சாதாரண மனிதரல்ல. அவர் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு கவிஞர்.

Arthur RImbaud என்னும் அந்த பிரெஞ்சு கவிஞருக்குத்தான் மக்கள் இன்னமும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

37 வயதில் இறந்துபோன Arthur Rimbaudக்கு இன்னமும் காதல் கடிதங்கள் எழுதுபவர்களும் இருக்கிறார்கள்.

Rimbaud, நீங்கள் இல்லையென்றாலும் உங்களை எப்போதும் காதலிப்பேன் என்பதை தெரிந்து கொளுங்கள் என்கிறது ஒரு கடிதம்.

உங்களுக்கு சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் தருவேன் என்கிறது மற்றொரு கடிதம்.

தாங்கள் வாழ்வில் சந்தித்த ஏமாற்றங்களை Rimbaudக்கு சொல்வதன் மூலம் ஆறுதல் தேடிக் கொள்கிறார்கள் மக்கள்.

அவர் உயிருடன் இருப்பது போல் கருதியே மக்கள் அவரிடம் பேசுகின்றார்கள் என்கிறார் அந்த கல்லறையின் காவலர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers