சுற்றுலா சென்ற பிரித்தானியர்களின் வேனுக்குள் மயக்க வாயுவை செலுத்திய திருடர்கள்: பிரான்சில் நடந்த திகில் சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
253Shares

சுற்றுலா சென்ற பிரித்தானிய குடும்பம் ஒன்று வேனுக்குள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, வேனுக்குள் மயக்க வாயுவைச் செலுத்திய திருடர்கள் பாஸ்போர்ட் உட்பட பல பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

கோடை விடுமுறையில் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், பிரான்சில் சற்று தூங்கி ஓய்வெடுக்கலாம் என்று எண்ணியRedditchஐ சேர்ந்த Perry Hudson, அவரது மனைவி Kim Heighway (31), மகள் Olivia (15), மகன்கள் Jacob(12), மற்றும் Charlie (10) ஆகியோர் Antran என்ற இடத்தில் வேனை நிறுத்திவிட்டு தூங்கியிருக்கிறார்கள்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த திருடர்கள், மயக்க வாயுவை வேனுக்குள் செலுத்தியிருக்கிறார்கள்.

பின்னர் வேனின் கதவை உடைத்துத் திறந்து, வேனுக்குள் இருந்த 1,500 பவுண்டுகள் மதிப்பிலான பொருட்கள், ஐந்து பேருடைய, பாஸ்போர்ட், மருந்துகள், அவர்களுடைய பர்ஸ்கள் மற்றும் விலையுயர்ந்த கைப்பை ஆகியவற்றை திருடி சென்றிருக்கின்றனர்.

பொருட்களும் பாஸ்போர்ட்களும் போன சோகம் ஒருபக்கம் இருக்க, கதவைத் திறந்தபோது தனது மகள் கதவின் அருகில்தான் படுத்திருந்ததாகவும், அவர்கள் நினைத்திருந்தால் தங்களை கொலைகூட செய்திருக்கலாம் என்றும் அதிர்ச்சியுடன் தெரிவிக்கிறார் Hudson.

பொலிசாருக்கு அவர்கள் தகவலளிக்க, அருகாமையில் உள்ள CCTV கெமரா ஒன்றில் திருடர்கள் சுவர் ஏறி தப்பிச் செல்லும் காட்சிகள் மங்கலாக பதிவாகியுள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் குழந்தைகளை அதிகம் பாதித்துள்ள நிலையில், அவர்கள் அதிர்ந்துபோயுள்ளார்கள்.

அந்த திகில் சம்பவத்தால் அதிக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள Hudsonஇன் மகள் Olivia, இன்னமும் சரியாக தூங்க முடியாமல் தவிக்கிறாளாம்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்