பிரான்சில் சிகிச்சைக்கா வந்த பெண்களை மருத்துவர்கள் செய்த செயல்... விசாரணையில் வெளியான உண்மை

Report Print Santhan in பிரான்ஸ்
510Shares

பிரான்சில் சிகிச்சைக்காக வந்த பெண்களை மருத்துவர் பாலியல்பலாத்காரம் செய்திருக்கும் சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரான்சின் Saint-Cyr-l'École நகரில் பணியாற்றி வரும் மருத்துவர் மீது கடந்த திங்கட்கிழமை இரண்டு பெண்கள் பாலியல் புகார் கொடுத்தனர்.

இதனால் Yvelines மாவட்ட அரச வழக்கறிஞர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் நோயாளிகளாக இருந்த இவர்கள் மருத்துவரை சந்தித்தபோது, அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இவர்களின் குற்றச்சாட்டிற்கு முதலில் மறுத்த மருத்துவர், அதன் பின் தொடர் விசாரணையில் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதால், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

குறித்த மருத்துவர் முதலில் இந்த குற்றச்சாட்டினை மறுத்தபோதும், பின்னர் அவர்கள் இருவர்களுடனும் பாலியல் ரீதியான தொடர்பு இருந்ததை ஏற்றுக்கொண்டுள்ளார். விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்