விண்வெளியில் ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களை களமிறக்கும் பிரான்ஸ்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நிர்வாகம், ஒரு இராணுவ விண்வெளி கட்டளையகத்தையும் (space command), கோளப்பாதையில் செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜூன் 2018 இல், விமானப்படையின் விண்வெளி கட்டளையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்காகவும், படையை விரிவுபடுத்துவதற்காகவும், புதிய விண்வெளிப்படை ஒன்றை உருவாக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.

தங்கள் பங்குக்கு, விண்வெளியில் களமிறங்க இருக்கும் பிரான்சும் அது தொடர்பான தனது திட்டங்களை அறிவித்துள்ளது.

அதன்படி, கட்டளையக செயல்பாடுகளின் இந்த முதல் கட்டம், அருகிலுள்ள பிற செயற்கைக்கோள்களை அடையாளம் காண்பதற்காக, வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்ட புதிய தலைமுறை சைராகஸ் (Syracuse) செயற்கைக்கோள்களை அனுப்பும்.

இரண்டாவது கட்டமாக, சுட்டு வீழ்த்துவதற்கு மிகவும் கடினமான நானோ செயற்கைக்கோள்கள் என்றழைக்கப்படும், அழிக்கும் அல்லது போட்டி செயற்கைக்கோள்களை திறனிழக்கச் செய்யும் திறன்வாய்ந்த, துணை இயந்திர துப்பாக்கிகளும் லேசர் கதிர்கள் பொருத்தப்பட்ட செயற்கைக்கோள்களும் அனுப்பப்படும்.

ஜூலை 13 அன்று மேக்ரானால் சமிக்ஞை செய்யப்பட்ட உருவாக்கமான புதிய இராணுவக் கிளை, விமானப் படையுடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும், இனிமேல் இது விமானம் மற்றும் விண்வெளிப்படை என்று அழைக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி, ஜூலை 25 அன்று லியோனில் உள்ள விமான தளம் 942இல் 100 க்கும் அதிகமான விமானப்படை இராணுவ அதிகாரிகளின் முன்பு உரையாற்றியபோது தெரிவித்தார்.

’பாதுகாப்பதற்கு விண்வெளி ஒரு புதிய முன்னணி விடயமாக உள்ளது, எனவே நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று பார்லி அறிவித்ததுடன், ‘விண்வெளி பொதுவானதாக மாறும் ஒரு நாளை நாம் நாடுகையில், அது ஒரு கற்பனை வடிவமாக நீண்ட காலத்திற்கு நீடிக்காது, அது ஒரு நம்பகமான இலட்சியமாக இருக்கும்’ என்றார்.

மற்ற ஐரோப்பிய சக்திகளும் இந்த திட்டத்திற்கு பங்களிக்க வேண்டும் என்று கூறிய பார்லி, பிரான்ஸ் அதன் சுதந்திரத்தைக் கொண்டுள்ளது என்றாலும், இந்த புதிய விண்வெளி மோதலில் அது தனித்துவிடப்படவில்லை என்றும் கூறினார்.

இப்படியாக நமது ஐரோப்பிய பங்காளிகளுடன் சேர்ந்து விண்வெளி சார்ந்த அறிவின் எதிர்கால பொதுவான ஒரு திறனை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், செயற்கைக்கோள்களைக் கண்டறிந்து அடையாளம் காண்பதற்கான ரேடார் தொழில்நுட்பத்திற்கு ஜேர்மனியும் இத்தாலியும் பங்களிக்கும் என்றும், பிரான்ஸ்

சார்பில் ஏற்கனவே விமான மற்றும் விண்வெளி கட்டளையக வரவு-செலவுத் திட்டத்திற்கு 3.6 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 700 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்