வெளிநாட்டில் சுற்றுலா சென்ற 10 பிரெஞ்சு குடிமக்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

கிரீஸ் நாட்டில் விபத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் நாட்டவர்கள், அந்த நாட்டுக் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை குறித்த 10 பிரெஞ்சு குடிமக்களும் சிறிய இயந்திர படகு ஒன்றில் பயணித்துள்ளனர்.

அப்போது, மரத்திலான இன்னொரு படகை மோதித்தள்ளியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது.

கிரேக்க நாட்டின் Porto Heli எனும் கடல் பிராந்தியத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. பத்து மீற்றர் நீளம் கொண்ட இயந்திர படகு ஒன்றில் பயணித்த இந்த பிரெஞ்சு நாட்டவர்கள்,

கடலில் பயணித்துக்கொண்டிருந்த அல்லது மீன் பிடித்துக்கொண்டிருந்த சிறிய மரப்படகு ஒன்றுடன் மோதியுள்ளனர். இதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர், ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்..

இச்சம்பவத்தை அடுத்து சனிக்கிழமை குறித்த பத்து பிரெஞ்சு நாட்டவர்களையும் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த படகின் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers