சந்தேகத்திற்குரிய விதத்தில் காணப்பட்ட பார்சல், விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றம்: பிரான்சில் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் விமான நிலையம் ஒன்றில் சந்தேகத்துக்குரிய விதத்தில் பார்சல் ஒன்று காணப்பட்டதையடுத்து மக்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் பிரான்சின் Bordeaux விமான நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் பார்சல் ஒன்று காணப்பட்டது.

அதனால் உடனடியாக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் உட்பட மக்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பொலிசார் விமான நிலையத்தில் குவிக்கப்பட்ட நிலையில், விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கோபமுற்ற பயணி ஒருவர், வெகு நேரமாக காத்திருக்கிறோம், எங்களை கொண்டு செல்ல ஒரே ஒரு பேருந்து வந்திருக்கிறது, அதில் காத்திருப்போரில் மூன்றில் ஒரு பகுதியினர்தான் செல்ல முடியும் என்று விமான நிறுவன இணையதளத்திலேயே எழுதியிருந்தார்.

விமான நிலையத்திற்குள் என்ன நடக்கிறது என்று தெரியாத மற்றொரு பயணி, தயவு செய்து உங்கள் ஊழியர் யாராவது ஒருவரை அனுப்பி என்ன நடக்கிறது என்றாவது சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்