பிரெஞ்சு அரசியல்வாதியின் ஸ்டண்ட்: நகைப்புக்குள்ளான ஒரு புகைப்படம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஊழல் புகார் ஒன்றில் சிக்கி ராஜினாமா செய்த ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் நகைப்புக்குள்ளாகியுள்ளது.

பிரான்ஸ் நட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சார்க்கோஸியின் கேபினட்டில் அமைச்சராக இருந்து, ஊழல் புகார் ஒன்றில் சிக்கியதால் ராஜினாமா செய்தவர் Eric Woerth, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சார்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்.

இவர் சமீபத்தில் செங்குத்தான ஆல்ப்ஸ் மலையில் ஏறுவது போன்ற ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றம் செய்திருந்தார்.

அதில் அவர் கஷ்டப்பட்டு, பனிக் கோடரி மற்றும் கயிற்றின் உதவியால் செங்குத்தான மலையில் ஏறுவது போன்ற ஒரு காட்சி தெரிந்தது.

சட்டென அந்த புகைப்படம் வைரலான நிலையில், அந்த புகைப்படத்தை உற்றுக் கவனித்த சில ட்விட்டர் பயனர்கள், அதில் சில தவறுகளைக் கண்டு பிடித்தனர்.

முதலாவது அந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்தால், அதே படத்தில் இருவர் கிடைமட்டமாக நிற்பது தெரிந்தது.

அடுத்ததாக Ericஇன் மேலாடையிலிருந்த ஜிப் ஒன்றின் கைப்பிடி, தரையை நோக்கி இருப்பது தெரிந்தது.

மூன்றாவதாக Ericஇன் அருகிலிருக்கும் கயிறு தொங்கிக் கொண்டிராமல் தரையில் கிடந்தது தெரிந்தது.

எனவே சாதாரணமான தரையில், முழங்காலில் நின்று, மலையேறுவது போல் போலியான கோணத்தில் அந்த புகைப்படத்தை Eric பதிவேற்றம் செய்திருந்ததை மக்கள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

அவரை கிண்டல் செய்யும் மீம்களையும் கருத்துக்களையும் பதிவேற்றம் செய்து, Ericஐ ஒரு வழி பண்ணிவிட்டார்கள் மக்கள்.

ஒருவர், விடுமுறையில்கூட அரசியல்வாதிகள் பொய்தான் சொல்கிறார்கள், அது அவர்களது இரண்டாவது இயல்பு என்று எழுத, மற்றொருவர், இல்லை, இல்லை, அதுதான் அவர்களது முதலாவது இயல்பே என்று பதிலளித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers