பிரான்சில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Ramouzens நகரில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த சிறுவன், எதிர்பாராத விதமாக மர முறிவுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளான்.

Saint-German-en-Laye நகரைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவன், Ramouzens நகரில் உள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றுள்ளான்.

அங்குள்ள ஊஞ்சலில் சக மாணவர்களுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் மரக்கிளையோடு முறிந்து விழுந்தது.

இதனால் குறித்த சிறுவன் மரக்கிளையில் சிக்குண்டு பலத்த காயத்திற்கு உள்ளாகினான். அதனைத் தொடர்ந்து, தகவல் அறிந்த மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டனர்.

ஆனால், அதற்குள்ளாக குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான். அந்த பூங்காவில் மொத்தம் 24 சிறுவர்கள் சுற்றுலாவிற்காக வந்திருந்தனர்.

இச்சம்பவத்தினால் அவர்கள் அனைவரும் தீவிர மன அழுத்தத்திற்கு உள்ளாகினர். பின்னர் அங்கு உளநல சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

உயிரிழந்த குறித்த சிறுவன், கோடைக்கால சுற்றுலாவுக்காக Gers நகருக்கு வந்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers