பிரான்சில் திமிங்கலத்தின் குட்டி ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
Finistere நகரின் Penmarc'h கடற்கரையில் நேற்று காலை சுமார் 13 மீற்றர் நீளம் கொண்ட இது ஒரு 'இளம் திமிங்கிலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அங்கிருந்த மக்கள் உடண்டியாக அதிகாரிகளுக்கு தெரிவித்ததால், விரைந்து வந்த அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், கப்பல் ஒன்றுடன் மோதி உயிரிழந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக இக்கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. fin whale என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இவ்வகை திமிங்கிலங்கள் 20 மீற்றர் நீளம் வரை வளரும். நீலத் திமிங்கிலங்களுக்கு பிறகான மிகப்பெரிய கடல்வாழ் உயிரினம் இது என்பது குறிப்பிடத்தக்கது.