விமானத்தில் பயணியை மிரட்டி பெண் விமான ஊழியர்... எதற்காக தெரியுமா? கமெராவில் சிக்கிய பகீர் காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சிலிருந்து சென்ற விமானத்தில் பெண் பயணியை, பெண் விமான ஊழியர் ஒருவர் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

EasyJet ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று, பயணிகளுடன் பிரான்சிலிருந்து பிரித்தானியாவிற்கு சென்றுள்ளது.

அப்போது விமானத்தில் தன் குடும்பத்தினருடன் பெண் பயணி ஒருவர் பயணித்துள்ளார். அதில் அவரின் 2 வயது குழந்தை ஒன்று விமானத்தின் சீட்டில் உட்காராமல், எழுந்து நின்று பின்னால் இருப்பவர்களை பார்த்தபடியே இருந்துள்ளது.

அதுமட்டுமின்றி சக பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெண் விமான ஊழியர், உடனடியாக அங்கு வந்து, குடும்பத்தினரிடம் உங்கள் குழந்தையை சரியாக கவனித்து கொள்ளுங்கள், இல்லை என்றால் 100 பவுண்ட் சுத்தம் செய்வதற்காக அபராதம் விதிக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட, அந்த வீடியோவைக் கண்ட பலரும், பெண் விமான ஊழியர் செய்தது நல்லது தான், குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம், அதற்காகத் தான் அவர் அப்படி சொல்லியிருக்கார் என்று கூறி வருகின்றனர்.

விமானநிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வீடியோவைப் பார்த்தாலே நன்றாக தெரிகிறது, அவர் குழந்தையின் பாதுகாப்பிற்காகவே அப்படி சொல்லியுள்ளார், மற்றபடி அவரிடம் சுத்தம் செய்வதற்காக 100 பவுண்ட் எல்லாம் வங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்