காளைச்சண்டை பார்க்கச் சென்று சர்ச்சையில் சிக்கிய பிரெஞ்சு அமைச்சர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு அமைச்சர்கள் சிலர் காளைச்சண்டை பார்க்கச் சென்றதையடுத்து கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

விவசாயத்துறை அமைச்சரான Didier Guillaume மற்றும் Jacqueline Gourault என்னும் அமைச்சர் ஆகிய இருவரும் தென்மேற்கு பிரான்சிலுள்ள Bayonneஇல் நடக்கும் காளைச்சண்டையை பார்க்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.

அவர்கள் இருவரும் Bayonneஇன் மேயருடன் அந்த காளைச்சண்டையை காணச் சென்றிருந்தனர்.

விலங்குகள் நலனுக்கு பொறுப்பான விவசாயத்துறை அமைச்சரான Didier Guillaume அந்த புகைப்படத்தில் இருந்ததால், பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்கள்.

Bardot Foundation என்னும் விலங்குகள் நல அமைப்பு, அமைச்சர்கள் தரம் குறைந்து கொண்டே செல்வதாகவும், அந்த காட்சி காட்டுமிராண்டித்தனமாக இருந்ததாகவும் விமர்சித்திருந்தது.

30 millions d'amis, L214 et One Voice என்னும் விலங்குகள் நல அமைப்புகளும் அமைச்சர்கள் காளைச்சண்டையை காணச் சென்றதை கடுமையாக விமர்சித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்