கனடாவிலிருந்து வந்து தமிழகத்திற்கு உதவிய பிரான்ஸ் நாட்டவர்... குவியும் பாராட்டு! நெகிழும் கிராம மக்கள்

Report Print Santhan in பிரான்ஸ்

தமிழகத்தில் ஏரியை காக்க பிரான்ஸ் நாட்டைச் செய்த நபர் செய்து உதவிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர், பிரான்சிஸ் கோடி. இவர், தற்போது கனடா நாட்டில் வசித்து வரும் இவர், டொரோன்டோ பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல்துறை பேராசிரியராக பணிபுரிந்துவருகிறார்.

அவ்வப்போது தமிழகம் வரும் இவர், இங்கிருக்கும் சில பல்கலைக்கழகங்களில் தற்காலிகப் பேரசிரியராக பணி புரிந்து வருகிறார்.

சுற்றுச்சூழல் மீது ஆர்வம்கொண்ட பிரான்சிஸ் கோடி, அதை செயல்படுத்தத் துடிக்கிற நபர்களிடம், சமூக ஆர்வலர்களிடம் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறார்.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின்மீது கொண்ட பிரியத்தால், தமிழ் பேச கற்றுக்கொண்டு, தற்போது அழகாகத் தமிழிலேயே பேசிவருகிறார்.

கடந்த மாதம் சென்னை வந்த பிரான்சிஸ் கோடி, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலுக்கு சென்றுள்ளார்.

அங்கிருக்கும் மக்களிடம் பேசிய போது, பேராவூரணி இளைஞர்கள் கைபா என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நீர்நிலைகள் தூர் வாரும் பணியை துவங்கியுள்ளதாகவும், அதில் முதற்கட்டமாக பேராவூரணி ஏரி துர்வாரும் பணியை செய்து வருவதாக கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு பாராட்டிய பிரான்சிஸ், உடனடியாக ஏர்தூர்வாரும் பணி நடைபெறும் இடத்திற்கு சென்று, அங்கு பார்வையிட்டுள்ளார். அப்போது அங்கிருப்பவர்களிடம் தண்ணீர் பிரச்சனையிலிருந்து மீள, நீர்நிலைகளை பராமரிக்க என்ன உதவி கேட்டாலும், கேளுங்கள் என்று கூறி சென்றுள்ளார்.

இதேபோல் கைபா அமைப்பின்மூலம் நாடியம் ஏரியைத் தூர் வார உள்ள செய்தியையும், அந்த ஊர் மக்கள் திருவிழா நேரத்தில் நடத்தப்படும் ஆடல்,பாடல் கலை நிகழ்ச்சிக்குத் தடை விதித்து, அதற்கு ஆகும் செலவை ஏரியை மீட்டெடுக்க பயன்படுத்த இருக்கிறோம்.

இதை ஊர் கூட்டத்திலேயே முடிவுசெய்து, ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பற்றி அறிந்து, உடனே நாடியம் ஊரைச் சேர்ந்த நீலகண்டன் என்பவரை சந்தித்து, ஏரி தூர் வாரும் பணிக்கு தன்னுடைய தொகையாக 10,000 நன்கொடை யாக கொடுத்து அசத்தியிருக்கிறார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருத்தர், நம் மண் மீதும் மக்கள் மீதும் இவ்வளவு அக்கறையுடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று நெகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி பிரான்ஸிஸ் கோடிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers