பாரிஸில் வெடித்து தீப்பற்றி எரிந்து சாம்பலான மருத்துவமனை: திகில் வீடியோ

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மருத்துவமனை தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் புறநகர் பகுதியான கிரேட்டிலில் உள்ள ஹென்றி மொண்டோர் மருத்துவமனையிலேயே புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் 8 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை வளாகத்தில் வெடி சத்தம் கேட்டதாகவும், பின்னரே தீ விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்த நபர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு தீயணைப்பு வாகனத்துடன் வீரர்கள் விரைந்தனர்.

மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 100-க்கும் மேற்பட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் வியாழக்கிழமை அதிகாலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தீ மருத்துவமனயைின் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஹென்றி மொண்டோர் மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ இப்போது தீயணைப்பு வீரர்களின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று பாரிஸ் பொது மருத்துவமனைகளின் தலைவர் மார்ட்டின் ஹிர்ஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு மரணம் ஏற்பட்டுள்ளது இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என்று அவர் கூறினார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்