பிரான்சின் முக்கிய நகரில் குவிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகள்!

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் Biarritz நகரில் ஜி7 மாநாடு நடைபெற உள்ளதையொட்டி, பாதுகாப்பு அதிகாரிகள் அதிகளவில் குவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Biarritz நகரில் 7 நாடுகள் பங்குபெறும் ஜி7 மாநாடு, வரும் 24ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

இதில் பிரான்ஸ், கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா மற்றும் ஆகிய நாடுகள் கலந்துகொள்கின்றன.

இம்மாநாட்டின்போது வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க 10 ஆயிரம் அதிகாரிகள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது வன்முறை சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று தெரிய வந்ததால், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களின் எண்ணிக்கையை 13,200 ஆக பிரான்ஸ் அதிகரித்துள்ளது.

இவர்களில் CRS பொலிசார், ஜோந்தாம் அதிகாரிகள், RAID உள்ளிட்ட அதிரடிப்படைகளும் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 400 தீயணைப்புப்படை வீரர்கள் மற்றும் 13 மருத்துவ குழுவும் தயாராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்