பிரான்ஸ் நாட்டை நடுங்க வைத்த மருத்துவரின் செயல்: கொத்து கொத்தாக சிக்கிய ஆதாரம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்ஸ் மருத்துவர் ஒருவர் தம்மிடம் சிகிச்சை பெற வந்த சுமார் 250 சிறார்களை துஸ்பிரயோகம் செய்ததாக பகீர் தகவல் ஆதாரத்துடன் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் பிரான்ஸ் நாட்டில் இதுவரை நடந்த சிறார் துஸ்பிரயோக வழக்குகளில் மிகவும் மோசமான சம்பவம் என கூறப்படுகிறது.

தற்போது 66 வயதாகும் Joel Le Scouarnec என்ற ,மருத்துவர் வயிறு தொடர்பான நோய்களுக்கு சிறப்பு மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார்.

இவரே கடந்த 30 ஆண்டுகளாக இருபாலின சிறார்களையும் துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி, அதை தமது நாட்குறிப்பில் பதிவு செய்தும் வைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு சிறார்கள் தொடர்பான ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து கொண்ட விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கிய இவர்,

2017 ஆம் ஆண்டு மீண்டும் பொலிசாரிடம் சிக்கும் வரை, தமது மருத்துவ தொழிலை தொடர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே மருத்துவர் ஜோயல் 4 மற்றும் 6 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் அந்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ள மருத்துவர் ஜோயலின் சட்டவல்லுனர்கள், குறித்த சிறுமிகள் மீது அவர் தவறாக நடக்க முயன்றிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டத்தில் மருத்துவர் ஜோயலின் குடியிருப்பினை சோதனையிட்ட அதிகாரிகள்,

அங்கிருந்து நாட்குறிப்பு ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் சுமார் 250 சிறார்களை அவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதை பதிவு செய்திருந்தது அதிகாரிகளிடம் சிக்கியது.

பிரான்ஸ் வரலாற்றிலேயே இதுபோன்ற சிறார் துஸ்பிரயோக வழக்கு இதுவரை நடந்ததில்லை என உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்