பிரான்சில் விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்... ஒருவர் படுகாயம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இரண்டு பேர் மட்டுமே செல்லக் கூடிய விமானம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சிறிய ரக விமானம் ஒன்று Epone மற்றும் Jumeauville (Yvelines) நகரங்களுக்கு இடையே பறந்த போது, திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்த பெரும் வயற்பரப்பில் விழுந்தது.

இதனால் விமானத்தின் பல பாகங்கள் உடைந்து நொருங்கியதால், விமானி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

தீயணைப்பு படையினரால் அவர் மீட்கப்பட்டு Beaujon வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விமானத்தில் இரண்டு பேர் மட்டுமே பயணித்துள்ளனர், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்