இந்திய பிரதமர் மோடி உடனான மேக்ரானின் சந்திப்பு.. கையெழுத்தான ஒப்பந்தங்கள்

Report Print Kabilan in பிரான்ஸ்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு கூட்டறிக்கையை வெளியிட்டார்.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான், இந்திய பிரதமர் மோடி இருவரும் பிரான்சின் Château de Chantilly நகரில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் இரு தரப்பிலும் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு நாட்டு தலைவர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் பயங்கரவாதத்தினை அழிப்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

கூட்டறிக்கையில் உள்ள அம்சங்கள்
  • பயங்கரவாதத்திற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பிரான்சிலும், இந்தியாவிலும் நடந்த எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள், பயங்கரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களிலான வெளிப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
  • உலகமெங்கும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு, இந்தியா முன்மொழிந்தபடி, உலகளாவிய மாநாடு ஒன்றை விரைவாக நடத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
  • பயங்கரவாத அமைப்புகளை தடை செய்து அறிவிப்பதற்கு வழி செய்யும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் எண்.1267 மற்றும் தொடர்புடைய தீர்மானங்களை, ஐ.நாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும்.
  • பிரெஞ்சு, இந்திய நிறுவனங்கள் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பிரச்னைகளை தீர்க்கும் பணியினை வலுப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மேக்ரான், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் பேச உள்ளதாகவும், இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்