பிரான்சில் ஜி7 உச்சி மாநாடு நடக்கும் பகுதிக்கு வெளியே பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் மற்றும் நட்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் ஜி7 உச்சி மாநாடு பியாரிட்ஸ் ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள Bayonne பகுதியில் 3 நாட்களாக நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக மற்ற நாட்டு தலைவர்களும் அங்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் முதலாளித்துவத்துவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக்கார்கள், உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆர்வலர்கள், Basque பிரிவினைவாதிகள் மற்றும் 'மஞ்சள் உடுப்பு' எதிர்ப்பாளர்கள் என ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் பிரெஞ்சு நகரமான ஹெண்டாயிலிருந்து ஸ்பெயினில் உள்ள இரூன் வரை நடந்து, காலநிலை நடவடிக்கை, ஓரின சேர்க்கை உரிமைகள் மற்றும் சிறந்த பொருளாதார மாதிரி உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உச்சி மாநாடு நடக்கும் பகுதியை சுற்றிலும் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த பொலிஸார் அவர்களை கலைக்கும் பொருட்டாக, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், பீரங்கியை இருந்து தண்ணீரை பீய்ச்சியும் அடித்தனர்.
அதேசமயம் போராட்டக்கார்கள் கற்களை கொண்டு பொலிசாரை தாக்கியதால், அவர்களை தடியடி நடத்தி கலைக்க முற்பட்டுள்ளனர். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் காயமடைந்துள்ளனர்.